" alt="" aria-hidden="true" />
அரசு பள்ளியை புதுப்பித்த சென்னை போலீஸ் இனி மாணவர்களின் நண்பன்
சென்னை எஸ்.ஆர்.எம்.சி போலீஸ் எல்லைக்குட்பட்ட போரூர், மங்காடு, குன்றத்தூர் காவல் நிலையம் சார்பில் போரூரில் உள்ள பழைய ஆரம்பப் பள்ளி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு 23 மின்விசிறிகள், 95 நாற்காலிகள், பலகைகள் மற்றும் மேசைகள், குறிப்பேடுகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினர். மேலும் பிரார்த்தனை மண்டபம் மற்றும் கழிப்பறைகளை போலீஸார் புதுப்பித்துள்ளனர்.