தமிழக சட்டப்பேரவையில் பென்னிகுக் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதன்முறையாக அரசு விழா அனுஷ்டிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 1841-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி ஆங்கிலேய ராணுவ அதிகாரிக்கு மகனாக பென்னிகுக் பிறந்தார்.
தற்போது அவரது பிறந்த நாள் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் உற்சாகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரது பிறந்த நாள் விழாவில் விவசாயிகள் அனைவரும் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் பென்னிகுக் மணிமண்டபம் விழாக்கோலம் பூண்டுள்ளது
அரசு விழாவாக கொண்டாடப்படும் பென்னிகுக் பிறந்த நாள் - ஏற்பாடுகள் தீவிரம்